புதிய பேருந்து சேவை துவக்கம்

4 months ago 16

பரமக்குடி,பிப்.23: நயினார்கோவில் மேற்கு ஒன்றியம் அக்கிரமேசியில் இருந்து ராமநாதபுரத்திற்கு புதிய பேருந்து வசதியை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தில் இருந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பணி நிமிர்த்தமாகவும் தினமும் பலர் ராமநாதபுரம் சென்று வருகின்றனர்.

பேருந்து வசதி இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கிராமத்திற்கு ராமநாதபுரத்தில் படிக்கும் மாணவ,மாணவிகள் சென்று வருவதற்கு பேருந்து வசதி வேண்டி பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏவின் முயற்சியால் நேற்று, புதிய பேருந்து துவக்கி வைக்கப்பட்டது. இதனை எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார். உடன், நயினார்கோவில் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய துணை செயலாளர் வாசு, துணை மேலாளர் நாகராஜன், பரமக்குடி போக்குவரத்து கிளை மேலாளர் ரத்தினம், போக்குவரத்து கிளை அலுவலர் கந்தசாமி உட்பட பொதுமக்கள் பலர் இருந்தனர்.

The post புதிய பேருந்து சேவை துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article