புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

1 month ago 11

சென்னை: ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, பெரம்பூர் லோகோ பணிமனை அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காலை, எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இதேபோல், கேரேஜ் வேகன் பணிமனை முன்பு மாலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிளைச் பொருளாளர் ஹரி பிரசாத் தலைமை வகித்தார்.

2 ஆர்ப்பாட்டங்களிலும் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கத்தின் நிர்வாகத் தலைவர் எம்.சூரிய பிரகாஷ், நிர்வாகப் பொதுச் செயலாளர் சந்திரசேகரன், உதவி பொதுச் செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தற்போது ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஒரு சில ரயில்வே தொழிற்சங்கத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஆதரவாக செயல்படுகின்றன.

அதனை கண்டித்தும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்திற்கு பதிலாக மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 8வது ஊதியக் குழுவை உடனே அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

The post புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article