புதிய பாம்பன் ரயில்வே மேம்பாலம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு சிறப்பு அம்சம்: ஒன்றிய அமைச்சர் பேட்டி

2 weeks ago 6

சென்னை: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (சனிக்கிழமை) மதியம், டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், காவி தலைப்பாகைகள் அணிந்து, அணிவகுத்து தரையில் அமர்ந்து, ரயில்வே அமைச்சரை வரவேற்றனர். ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் மோடி திறக்க உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மதுரை செல்லும் வழியில், சென்னை வந்துள்ளார்.

இதையடுத்து, ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி; இந்தியாவில் உள்ள முக்கிய ரயில்வே மேம்பாலங்களில் பாம்பன் ரயில்வே பாலமும் ஒன்று. கடலுக்கு நடுவே, புதிய பாம்பன் ரயில்வே பாலம் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ள முதல் ரயில்வே மேம்பாலம் இதுதான். இது தமிழ்நாடு வரலாற்றில் இது ஒரு சிறப்பு அம்சமாக அமையும்.

தமிழ்நாட்டை பெரும் புயல் தாக்கிய பின்பு, பழைய பாம்பன் ரயில்வே மேம்பாலம், சேதமடைந்ததால், புதிய மேம்பாலம் கட்ட பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டு, உறுதுணையாக இருந்தார். இப்போது புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்ட இந்த புதிய பாம்பன் ரயில்வே மேம்பாலம், நாளை (இன்று) ஞாயிறு பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. சரித்திர புகழ்வாய்ந்த இந்த கடல், ரயில்வே மேம்பாலம், தமிழ்நாட்டில் திறக்கப்படுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு ரயில்வே அமைச்சர் கூறினார்.

The post புதிய பாம்பன் ரயில்வே மேம்பாலம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு சிறப்பு அம்சம்: ஒன்றிய அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article