புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்க குழு அமைப்பு

1 week ago 2

புதுடெல்லி, 

தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், பிப்ரவரி 18-ந் தேதி ஓய்வு பெறுகிறார். வழக்கமாக, அடுத்த நிலையில் உள்ள மூத்த தேர்தல் கமிஷனர்தான், புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஆண்டு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, தேடுதல் குழு பரிந்துரைக்கும் 5 அதிகாரிகளில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு உரிய நபரை தேர்வு செய்யும். அதற்காக, மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி செயலாளரும், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலாளரும் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

செயலாளர் மட்டத்திலான 5 அதிகாரிகளை தேர்வு செய்து இக்குழு பரிந்துரைக்கும். முதல் முறையாக, புதிய சட்டப்படி, புதிய தலைமை தேர்தல் கமிஷனர் தேர்வு செய்யப்படுகிறார்.

Read Entire Article