புதிய காப்பீட்டு திட்டங்கள் அறிமுகம் செய்தது எல்ஐசி

4 hours ago 3

சென்னை, ஜூலை 8: எல்ஐசி நிறுவனம் நவ் ஜீவன் , நவ் ஜீவன்  ஒற்றை பிரீமியம் ஆகிய புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றை எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) சத் பால் பானு அறிமுகம் செய்தார். இந்த 2 திட்டங்களும் சேமிப்பு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்பவை. நவ் ஜீவன்  (912) குறிப்பிட்ட கால தொடர் பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டம். குறைந்தபட்ச நுழைவு வயது 30 நாட்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். பிரீமியங்களை 6, 8, 10 ஆண்டுகள் என்ற அடிப்படையில் செலுத்தலாம். அதிகபட்ச வயது 60. 12 ஆண்டு பிரீமியம் செலுத்த விரும்பினால், அதிக பட்ச நுழைவு வயது 59. பிரீமியம் செலுத்தும் ஆண்டுகளைப் பொறுத்து குறைந்தபட்ச பாலிசி காலம் 10 முதல் 16 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்படும். அதிகபட்ச பாலிசி காலம் 20 ஆண்டுகள். குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.5,00,000.இதுபோல், நவ் ஜீவன்  ஒற்றை பிரீமியம் (911) திட்டம், உத்தரவாதமான கூடுதல் தொகைகளுடன் கூடிய ஒற்றை பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டம். தொடக்கத்திலிருந்து பாலிசி காலம் முடியும் வரை ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும், உத்தரவாதமான கூடுதல் தொகை ஆயிரம் ருபாய் அடிப்படைக் காப்பீட்டுத் தொகைக்கு ரூ.85 என்ற விகிதத்தில் சேர்க்கப்படும். குறைந்தபட்ச நுழைவு வயது 30 நாட்கள். விருப்பம் 1ன் கீழ் அதிகபட்ச நுழைவு அதிகபட்ச நுழைவு வயது 60 ஆகவும், விருப்பம் 2ன் கீழ் 40 வயதாகவும் இருக்கும். பாலிசி காலம் குறைந்தபட்ச 5 ஆண்டுகள்; அதிகபட்சம் 20 ஆண்டுகள். குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.1,00,000. மேலும் விவரங்களுக்கு www.licindia.in-ல் உள்ள விற்பனை கையேட்டை பார்க்கலாம் என எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post புதிய காப்பீட்டு திட்டங்கள் அறிமுகம் செய்தது எல்ஐசி appeared first on Dinakaran.

Read Entire Article