புதிய உச்சம்

17 hours ago 2

ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நடப்பாண்டு மாநிலங்களுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) வளர்ச்சி விகிதம் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் இந்திய மாநிலமாக தமிழகம் உருவெடுத்து, கவனம் ஈர்த்துள்ளது. மாநிலத்தின் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதம் 9.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போதும் தமிழ்நாடு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆந்திராவின் வளர்ச்சி விகிதம் 8.21 சதவீதம் என்றும், ராஜஸ்தானின் வளர்ச்சி விகிதம் 7.82 சதவீதம் என்றும், அரியானாவின் வளர்ச்சி விகிதம் 7.55 சதவீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது கடந்த நிதியாண்டில் மாநிலத்தின் ஜிஎஸ்டிபி (2023-24) ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்தது. இது நடப்பு (2024-25) நிதியாண்டில் ரூ.17.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இதுவே மிகவும் உயர்ந்த வளர்ச்சி விகிதம் என்பதும் முக்கியமானது. பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி விகிதமே உண்மையான வளர்ச்சியாகும். பணவீக்கத்தை கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி விகிதம் என்பது பெயரளவு வளர்ச்சி வீதமாகும். இந்த வகையிலும் 14.2 சதவீதம் வளர்ச்சி பெற்று இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது தமிழ்நாடு.

இது ஒரு புறமிருக்க, கொரோனா நோய் தொற்றால் 2020-21ம்ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.07 சதவீதம் என்ற ரீதியில் மிகவும் குறைவான அளவில் இருந்தது. இந்தச்சூழலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற முதல்வர்தான், தற்போது இந்தியாவே வியக்கும் வகையில் தற்போது பொருளாதார வளர்ச்சியில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2021-22ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 8 சதவீதம் அல்லது  அதற்கு மேலான வளர்ச்சியினையே பெற்று வந்துள்ளது தமிழ்நாடு. இதன் புதிய உச்சமாகவும் புதிய வளர்ச்சி விகிதம் மாறியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்ேகாடு நமது முதல்வரும், அரசும் முனைப்புடன் சிறப்பாக செயல்பட்டதே இதற்கு பெரும் அடித்தளமாக மாறியுள்ளது. தற்போதைய பொருளாதார வளர்ச்சி என்பது வரும் ஆண்டுகளில் 12 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல்வரின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நிச்சயம் தமிழ்நிலம் எட்டிவிடும் என்பதும் பொருளாதார நிபுணர்களின் நம்பிக்கை.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ேசவைத்துறை முக்கிய பங்காற்றியுள்ளது. அதேபோல் தொழில்துறை, விவசாயம் என்று அனைத்து துறைகளின் பங்களிப்பும் கணிசமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 9.3 சதவீதமாக உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் ஏற்கனவே அவர்கள் கணித்திருந்தனர். ஆனால் இந்த கணிப்புகளையும் மீறி 9.69 சதவீதம் என்ற வளர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது தமிழ்நாடு.

வலுவான உள்கட்டமைப்பு, நிலையான நிர்வாகம் மற்றும் தெளிவான நீண்டகால தொலைநோக்கு பார்வை போன்றவை மாநிலத்தின் பொருளாதார செயல்திறனுக்கு முக்கிய காரணிகளாக இருந்தது என்று முதல்வர் தனது ஊடகப்பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சியானது பாலின சமத்துவம் மற்றும் சமச்சீர் பிராந்திய வளர்ச்சியில் கவனம் செலுத்தியதாகும். இதுவே வெற்றிக்கு மையாக செயல்பட்டது என்று திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற இலக்கையும் கோடிட்டு காட்டியுள்ளார். இது நமக்கான பெருமிதம் மட்டுமல்ல. தமிழ்நிலத்திற்கான தனித்துவம் என்பதும் நிதர்சனம்.

The post புதிய உச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article