புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத 2 அமைச்சர்கள்

3 months ago 29

சென்னை,

தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு, திமுக அமைச்சர்கள், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பங்கேற்றார். அதேபோல், கூட்டணி கட்சித் தலைவர்கள் வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், முத்தரசன், ஜவஹிருல்லா மற்றும் திமுக எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், சிவசங்கர் பங்கேற்கவில்லை. தாயாருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மதுரை சென்ற அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், விமான தாமதம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் லண்டனில் உள்ளதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

Read Entire Article