கோவில்பட்டி, ஜன. 11: கோவில்பட்டி அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ அருள்சாம்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் அருண்விக்னேஷ், செல்லத்துரை, செந்தில் ஆகியோர் லிங்கம்பட்டி மேட்டுத்தெருவில் உள்ள நீலச்சந்திரன் மனைவி ராஜம் (45) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 825 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிந்து ராஜத்தை கைது செய்தனர்.
The post புகையிலை பொருட்கள் விற்ற பெண் அதிரடி கைது appeared first on Dinakaran.