புகார்மனு கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்வுகாண வேண்டும்: தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவுறுத்தல்!

2 hours ago 1

சென்னை: புகார் மனு கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என தலைமைச் செயலர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியதாவது;

பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு அவர்கள் அளித்த புகார் மனுக்கு மூன்று நாட்களில் ஒப்புகை சீட்டு வழங்குவதும், அதன் மீதான முன்னேற்றம் குறித்து தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டால், அது குறித்து மக்களிடம் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

மேலும், கோரிக்கையை ஏற்றுக் கொள்ள சாத்தியமில்லை எனக் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட குடிமகனுக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான பதில் வழங்கப்படலாம். பொது மக்களிடம் இருந்து பெறப்படும் குறைத்தீர்ப்பு மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்தில் தீர்வுக்காண வேண்டும் என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழங்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் கூட்டிக் காட்டி உள்ளார். எனவே, மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தலைமை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

The post புகார்மனு கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்வுகாண வேண்டும்: தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Read Entire Article