பீரோ பட்டறை அதிபர் காரை மறித்து படுகொலை.. கொலைக் கைதிக்கு பண உதவி செய்ததால் ஆத்திரம் என தகவல்..!

2 months ago 14
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பீரோ பட்டறை நடத்தி வரும் பட்டறை சரவணன் என்பவர் பனங்காடு என்ற பகுதியில் காரில் சென்ற போது வழி மறித்த மர்மகும்பல் ஒன்று அவரை காரில் இருந்து இழுத்துபோட்டு சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த காரிப்பட்டி போலீசார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். சிறையில் இருக்கும் கொலை வழக்கு கைதிக்கு ஒருவருக்கு பட்டறை சரவணன் பண உதவி செய்ததால் எதிர்தரப்பினர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article