தேவையானவை:
பீட்ரூட் – ½ கப்,
தயிர் – 1 கப்,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 1,
புதினா – 1 கைப்பிடி,
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், புதினாவை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டவும். இதனுடன் உப்பு, தயிர் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அடித்து இறக்கினால் பீட்ரூட் லஸ்ஸி தயார். உப்புக்கு பதில் சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம். தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
The post பீட்ரூட் லஸ்ஸி appeared first on Dinakaran.