'பீக்கி பிளைண்டர்ஸ்': வைரலாகும் சிலியன் மர்பியின் முதல் தோற்றம்

3 months ago 28

வாஷிங்டன்,

சிலியன் மர்பி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இணையத்தொடர் பீக்கி பிளைண்டர்ஸ். முதல் உலகப் போருக்கு அடுத்து தொடங்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த தொடர் மிகவும் வரவேற்பு பெற்றது.

இந்தத் தொடரில் வெளியான பாடல்கள் வசனங்கள் அனைத்தும் மிகவும் புகழ் பெற்றது. தற்போது இதனை திரைப்படமாக எடுக்கும் முடிவினை நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இதிலும் சிலியன் மர்பிதான் நாயகனாக டாமி ஷெல்பி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டாம் ஹார்பர் இயக்கும் இந்தப் படத்தின் கதையை ஸ்டீவன் நைட் எழுதியுள்ளார்.

இந்நிலையில், டாமி ஷெல்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிலியன் மர்பியின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்துக்காக நடிகர் சிலியன் மர்பி ஆஸ்கர் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

By order of the Peaky Blinders... Tommy Shelby is back. Cillian Murphy and Steven Knight are reunited on set as production officially starts on the upcoming Netflix film. pic.twitter.com/qWsQuntzCe

— Netflix (@netflix) September 30, 2024
Read Entire Article