பீகார் வெள்ளத்தில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்

6 months ago 46

பாட்னா,

பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பீகாரில் நிவாரணப் பொருட்களுடன் பறந்த ராணுவ ஹெலிகாப்டர் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைப் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது வெள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஹெலிகாப்டரில் இருந்த 2 பைலட்டுகள் உள்பட 4 பேரையும் அங்கிருந்த பொது மக்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.

Read Entire Article