பீகார்: கங்கையில் படகு கவிழ்ந்து விபத்து; 3 பேர் பலி

2 hours ago 2

பாட்னா,

பீகார் மாநிலம், கதிஹர் மாவட்டத்தில் 17 பேருடன் கங்கையில் சென்ற படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாயமான 4 பேரை மீட்கும் பணி இன்னும் நடந்து வருகிறது.

இந்த விபத்து குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மனேஷ் குமார் மீனா தெரிவித்தார். பலியானவர்களில் இருவர் பவன் குமார் (60) மற்றும் சுதிர் மண்டல் (70) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

Read Entire Article