சாம்பியன்ஸ் டிராபி தொடர்; இந்த வீரர் இந்திய அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா

2 hours ago 2

மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், கருண் நாயர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றிருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றிருந்தார். அவர் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ரன்கள் அடிக்கும் திறன் கொண்டவர். ஆட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் அவரால் ஓவருக்கு 9 ரன்கள் அடிக்க முடியும்.

அவரது அதிரடியான பேட்டிங்கால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றிருக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் பார்மில் இல்லாத முதல் 3 பேரின் மீது பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் எந்த இரு இடத்திலும் களமிறங்கி நன்றாக விளையாடக்கூடியவர். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article