பீகாரில் வெள்ளத்தில் கோளாறு காரணமாக வெள்ளத்தில் தரையிறங்கியது ஹெலிகாப்டர்

1 month ago 22

Bihar, Helicopterமுசாபர்பூர் : பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் வெள்ளத்தில் அவசரமாக தரையிறப்பட்டது; இந்திய விமானப்படைக்கு சொந்தமான அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உணவு பொட்டலங்களை விநியோகித்து கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட சிங்கத்தை தொடர்ந்து வெள்ளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகள் உட்பட மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக உள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் கூறுகையில், ஹெலிகாப்டர் தர்பங்காவிலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு முசாபர்பூர் பகுதியில் விநியோகித்து கொண்டு இருந்தது. பொருட்களை விநியோகிக்க தாழ்வாக பறந்த வண்ணம் இருந்தது. தீடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகள் உள்பட 3 பேரை உள்ளூர் மக்கள் பத்திரமாகமீட்டனர் என தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் அவசரமாக தறியிறக்கப்பது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் சுப்ரத் குமார் சென், ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் மற்றும் பணியாளர் பாதுகாப்பாகவும், பாதிப்பில்லாமல் இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக, அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு பரிசோதனை மற்றும் தேவைப்பட்டால், சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

நிவாரண பொருட்களையும் மீட்ட மக்கள்

நிவாரண பொருட்களுடன் ஹெலிகாப்டர் வெள்ளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து விமானிகள் மற்றும் பணியாளரை மீட்ட மக்கள் ஹெலிகாப்டரில் இருந்த நிவாரண பொருட்களையும் மீது எடுத்து சென்றன

பீகாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 16 மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பீகாரில் வெள்ளத்தில் கோளாறு காரணமாக வெள்ளத்தில் தரையிறங்கியது ஹெலிகாப்டர் appeared first on Dinakaran.

Read Entire Article