
பாட்னா,
பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 3 இளைஞர்கள் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மொபைல் கேம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞர்கள் காதில் ஹெட்போன் அணிந்திருந்ததால் ரெயில் அருகே வருவதை கவனிக்க தவறியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் புர்கான் ஆலம், மன்ஷா தோலா, சமீர் ஆலம் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.