பிஸ்கட் பாக்கெட்டுக்குள் கஞ்சா - ஒருவர் கைது

11 hours ago 1

சேலம்,

தருமபுரியைச் சேர்ந்த முகமது சுகில் என்பவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்க்க சென்றார். அபோது கைதி ஒருவருக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து பார்த்துள்ளார்.

அதில் உள்ள பிஸ்கட் பாக்கெட்டுக்குள் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முகமது சுகில்லை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் முழு கண்காணிப்பில் இருக்கும் சிறைச்சாலையிலேயே கஞ்சாவை விற்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article