கொடைக்கானல், நவ. 10: கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையும் மீறி பிளாஸ்டிக் பாட்டில்களை மலைப்பகுதிக்கு கொண்டு வரும் சுற்றுலா பயணிகளிடம் பாட்டில் ஒன்றுக்கு இருபது ரூபாய் பசுமை வழியாக வசூலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று கொடைக்கானலுக்கு தடையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் 19 ஆயிரம் ரூபாய் பசுமை வரியாக கொடைக்கானல் நகராட்சி சுகாதாரப் பிரிவினர் வசூல் செய்தனர். 950 தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கொடைக்கானல் நகராட்சி சுகாதார அலுவலர் தினேஷ் குமார் தலைமையில் சுகாதார பிரிவு பணியாளர்கள் இப்பணியினை மேற்கொண்டனர்.
The post பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வந்த சுற்றுலா பயணிகளிடம் பசுமை வரி ரூ.19,000 வசூல்: கொடைக்கானல் நகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.