பட்டுக்கோட்டை, அக்.10: பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக ஜி.கனிராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபரிடம் கூறுகையில், பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் ( நெகிழி ) பயன்பாடு குறித்து தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உறுதியாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் முற்றிலும் ஒழிக்கப்படும். மேலும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கேரிபேக்குகளில் உணவு மற்றும் இதர பொருட்கள் வாங்குவதை தவிர்த்து பட்டுக்கோட்டை நகரத்தை தூய்மையாக பராமரிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பிற்கும் முழு ஒத்துழைப்புதர வேண்டும்.
பொதுமக்கள் மழை நீரை சேமிக்க வேண்டும். நீரின் முக்கியத்துவம் கருதியும், மழை நீர் என்பது உயிர் நீர் என்பதாலும் மழை நீரை பொதுமக்கள் அவசியம் தங்களது வீடுகளில் சேமிக்க வேண்டும். மிக முக்கியமாக பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தினசரி உங்கள் வீடுகளில் குப்பைகளை வாங்க வரும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியே பிரித்து கொடுக்க வேண்டும். மேலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை முழுமையாக செலுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வேண்டும். மேலும் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். என்னுடைய அலைபேசி எண் 7397396238 என்றார்.
The post பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும் appeared first on Dinakaran.