“பிளாக்மெயில் செய்கிறது மத்திய அரசு” - தேசிய கல்விக் கொள்கை பாதிப்புகளை பட்டியலிட்டு அன்பில் மகேஸ் சாடல்

16 hours ago 2

திருச்சி: “புதியக் கல்விக் கொள்கை, பி.எம் ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்திட்டால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்குவேன் என மத்திய அரசு பிளாக் மெயில் செய்கிறது” என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றம்சாட்டினர். அத்துடன் தேசிய கல்விக் கொள்கையின் பாதிப்புகளையும் அவர் பட்டியலிட்டார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: “பி.எம் ஸ்ரீ பள்ளித்திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு கல்விக்காக தர வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் தரமான கல்வியை வழங்கப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. தமிழகம் ஏற்கெனவே தரமான கல்வியைத்தான் வழங்கிக் கொண்டிருக்கிறது.

Read Entire Article