'பிளாக்' படத்தின் 'என் செல்ல கேடி' பாடல் வெளியீடு

3 months ago 26

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தற்போது 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், தற்போது பிளாக் படத்தின் 'என் செல்ல கேடி' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை நடிகர் ஜீவா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 

It's time to hit play ▶️! #EnChellaKedi from #BLACK is ready to steal your hearts❤️. Streaming now!✍️, - @SamCSmusic - @KapilKapilan_, @Raninareddy https://t.co/HkyPWO3Tgu@JiivaOfficial @priya_Bshankar @kgBalasubramani @actorvivekpra #ShivaShahra @iamswayamsiddhapic.twitter.com/qxKsYfWL5n

— Jiiva (@JiivaOfficial) October 7, 2024
Read Entire Article