பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

3 days ago 7

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது. அந்த பணிகளும் நிறைவு பெற்று மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிந்துவிட்டன.

இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது. பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட இருக்கிறார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும், மாணவர்கள் தாங்கள் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வழியாகவும் அனுப்பப்பட உள்ளன.

Read Entire Article