பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு..!!

3 hours ago 1

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி, 25ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ் பாடத்தில் 135 பேர் 100 க்கும் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

அதேநேரம் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் முதலிடத்தில் உள்ளது. 98.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு, மூன்று இடங்களில் ஈரோடு, திருப்பூர் உள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 25ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணை மே 9ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். +2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து வரும் 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 13 முதல் 17 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article