சிவகாசி: சிவகாசியில் பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கியது தொடர்பாக பாலிடெக்னிக் மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரும், பாலிடெக்னிக் மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக சுற்றி வந்தனர்.
இந்த நிலையில், மாணவியின் உடல்நலம் குன்றியது. இதையடுத்து பெற்றோர் அவரை சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், அவர் 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் சிவகாசி போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியிடம் விசாரித்தபோது, ‘கர்ப்பத்திற்கு காரணம் பாலிடெக்னிக் மாணவர் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாலிடெக்னிக் மாணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பிளஸ் 1 மாணவி கர்ப்பம்: மாணவர் சிக்கினார் appeared first on Dinakaran.