'பிளடி பெக்கர்' படத்தின் 3-வது பாடல் வெளியானது

2 months ago 15

சென்னை,

இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் 'பிளடி பெக்கர்'. இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் 'பிளடி பெக்கர்' படத்தின் டிரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த படத்துக்கு தணிக்கை குழு "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது. 'பிளடி பெக்கர்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் 3-வது பாடலான 'பொன்மயமே' என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக் மற்றும் விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்த பாடலை சத்ய நாராயணன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article