'பிளடி பெக்கர்' படக்குழுவை பாராட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

2 months ago 12

சென்னை,

இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் 'பிளடி பெக்கர்'. இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'பிளடி பெக்கர்' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின. தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். டார்க் காமெடி – திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'பிளடி பெக்கர்' திரைப்படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது, " எனக்கு 'பிளடி பெக்கர்' திரைப்படம் மிகவும் பிடித்து இருந்தது. அதில் வரும் நகைச்சுவை காட்சிகள் எனக்கு மிகவும் வொர்க் அவுட் ஆனது. இப்படம் ஒரு புதிய முயற்சி. வெளிநாட்டு திரைப்படங்களில் இம்மாதிரியான திரைப்படங்கள் பார்த்ததுண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை. தயாரிப்பாளர் நெல்சனுக்கு வாழ்த்துகள். கவின் அருமையாக நடித்து இருந்தார் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், ரெடிங் கிங்ஸ்லி மற்றும் திரைப்பட குழுவிற்கு எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார் லோகேஷ்.

Read Entire Article