கோலாலம்பூர்,
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் வீதம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.இதன்படிரூப் 2-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, நைஜீரியா, அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சுற்றில் ஒரு அணி தங்கள் பிரிவில் உள்ள குறிப்பிட்ட இரு அணிகளுடன் மட்டும் மோதும். இந்த சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகு குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும், குதி பெறும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
இந்நிலையில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோலாலம்பூரில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.