பிலிப்பைன்ஸ் ரோந்துப் படகு மீது சீன கடற்படை தாக்குதல்..?

16 hours ago 1
தென் சீனக் கடல் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு கப்பல் மீது சீன கடற்படையினர் மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. தண்ணீர் பீரங்கி மூலம், ஆண்டெனா உள்ளிட்ட கப்பலின் முக்கியமான கருவிகளைக் குறிவைத்து தண்ணீரை அதிவேகத்தில் பீய்ச்சி அடித்து தாக்கியதாக வீடியோவை பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை வெளியிட்டுள்ளது. மிக முக்கிய மீன்பிடிக் களமான தென் சீனக் கடலின் உரிமை தொடர்பாக சீனா, பிலிப்பைன்ஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. மீன்பிடிக் களம் மட்டுமல்லாமல், ஆண்டுக்கு சுமார் 3 டிரில்லியன் டாலர் அளவுக்கு கடல் வணிகம் நடைபெறும் மிக முக்கிய தடமாக தென் சீனக் கடல் விளங்குகிறது.
Read Entire Article