திருப்பூர்: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. அதை தவிர்க்க சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரயில் நாளை (17ம் தேதி) முதல் இயக்கப்படுகிறது.
நாளை மாலை 3.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரயில் இரவு 8.20 மணிக்கு சேலத்துக்கும், 9.25 மணிக்கு ஈரோட்டுக்கும், 10.10 மணிக்கு திருப்பூருக்கும், 10.58 மணிக்கு போத்தனூருக்கும் சென்று சேரும். இதுபோல் கொல்லத்தில் இருந்து வருகிற 18ம் தேதி காலை 10.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் 18ம் தேதி மாலை 6.20 மணிக்கு போத்தனூருக்கும், இரவு 7.18 மணிக்கு திருப்பூருக்கும், 8.20 மணிக்கு ஈரோட்டுக்கும், 9.20 மணிக்கு சேலத்துக்கும் சென்று சேரும்.
மற்றொரு சிறப்பு ரயில் பெங்களூரு-கொல்லம் இடையே 19ம் தேதி இயக்கப்படுகிறது. அன்று மாலை 3.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரயில் 19ம் தேதி இரவு 8.20 மணிக்கு சேலத்துக்கும், 9.25 மணிக்கு ஈரோட்டுக்கும், 10.10 மணிக்கு திருப்பூருக்கும், 10.58 மணிக்கு போத்தனூருக்கும் சென்று சேரும். கொல்லம்- பெங்களூரு சிறப்பு ரயில் 20ம் தேதி மாலை 5.50 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.35 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் போத்தனூருக்கு 21ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கும், திருப்பூருக்கு அதிகாலை 2.18 மணிக்கும், ஈரோட்டுக்கு 3.10 மணிக்கும், சேலத்துக்கு 4.10 மணிக்கும் சென்று சேரும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோடை விடுமுறையை முன்னிட்டு பெங்களூரு- கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.