'பிரேமம்' படத்தில் நடிக்க முதலில் மறுப்பு தெரிவித்த சாய் பல்லவி - ஏன் தெரியுமா?

2 months ago 11

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. இப்படத்தில் இவர் நடித்திருந்த மலர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி 2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடித்தார்.

தற்போது இவர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் படத்த்ல் நடித்து முடித்துள்ளார் . இப்படம் வரும் 31-ம் தேதி தீபாவலியன்று வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, படத்தின் புரமோசன் நிகழ்வில், தான் சினிமாவில் அறிமுகமான 'பிரேமம்' படத்தில் நடிக்க முதலில் மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ' அந்த நேரத்தில், நான் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குனர் புத்திரனிடமிருந்து அழைப்பு வந்தது. அதை நான் ஒரு மோசடி என்று நினைத்தேன். அப்படி ஒரு விஷயம் நடப்பது சாத்தியமில்லை என்று நினைத்து மறுப்பு தெரிவித்தேன். பின்னர், அது உண்மைதான் என்பதை உணர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்' என்றார்.

Read Entire Article