பிரேமம் பட இயக்குனரின் கைவண்ணத்தில் "ரெட்ரோ" டிரெய்லர்

4 weeks ago 8

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

'ரெட்ரோ' படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 மணி நேரம்கொண்ட படமாக இது உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், 'ரெட்ரோ' படத்தின் டிரெய்லரை பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கட் செய்திருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேரம், பிரேமம் என ஹிட் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் உடல்நிலை காரணமாக தற்போது படங்கள் இயக்குவதில் இருந்து விலகியுள்ளார். கடைசியாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

Trailer for #TheOne cut by The Wild One !!Thank you My Dear Friend @puthrenalphonse Felt so happy getting #Retrofied on our Naalaya Iyakkunar Days...❤️#Retro#RetroTrailer#RetroAudioLaunch #LoveLaughterWar #RetroFromMay1 pic.twitter.com/oFlv1juSfB

— karthik subbaraj (@karthiksubbaraj) April 18, 2025

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு 'ரெட்ரோ' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article