பிரேசிலில் நிலச்சரிவு; 10 பேர் பலி

4 months ago 12

பிரேசிலியா,

பிரேசில் நாட்டின் தென்கிழக்கில் மினாஸ் கெராய்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இபாதிங்கா நகரில் கடந்த சனிக்கிழமை இரவில் ஒரு மணி நேரத்தில் 80 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்தது.

இதில், அந்த பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வீடுகள் சேதமடைந்தன. நிலச்சரிவில் சிக்கி 8 வயது சிறுவன் உள்பட 9 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர, அருகேயுள்ள சான்டனா டோ பரெய்சோ நகரில் இருந்து மற்றொரு உடல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இதனால், பிரேசிலில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் வரை பலியாகி உள்ளனர். இதேபோன்று, அருகேயுள்ள பெத்தனியா நகரின் மலைப்பாங்கான பகுதியின் ஓரத்தில் தெரு ஒன்றில் இருந்த அனைத்தும் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் காணாமல் போயுள்ளார். அவர் கண்டறியப்படவில்லை. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

Read Entire Article