பிரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த தனியார் பேருந்து... ஒருவர் பலி

2 months ago 12
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே குப்பனூரில் சாலையை கடந்த டூவீலரின் மீது மோதுவதை தவிர்க்க உடனடியாக பிரேக் பிடித்தபோதிலும் பலனில்லாமல், தனியார் பேருந்து டூவீலர் மீது மோதிய விபத்தில் ஹெல்மெட் அணியாமல் அதில் வந்த நபர் உயிரிழந்தார். சென்னையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென பிரேக் பிடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அதில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பிய நிலையில், பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவிய எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். டூவீலரில் வந்து உயிரிழந்தவர் சின்னாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெரியசாமி என சங்ககிரி போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article