பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் மேடிசன் கீஸ்

1 day ago 6

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா), சக நாட்டு வீராங்கனையான ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மேடிசன் கீஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஹெய்லி பாப்டிஸ்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸ், சகநாட்டவரான கோகோ காப் உடன் மோத உள்ளார்.

Read Entire Article