பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

10 hours ago 4

பாரீஸ்,

ஆண்டின் 2-வது 'கிராண்ட்ஸ்லாம்' தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவி அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி - ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லோரென்சோ முசெட்டி கைப்பற்றினார். 2வது மற்றும் 3வது செட்டை அல்காரஸ் கைப்பற்றினார் . 4வது செட்டில் 2-0 என அல்காரஸ் முன்னிலையில் இருந்தபோது லோரென்சோ முசெட்டிக்கு காயம் ஏற்பட்டது . காயம் காரணமாக அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

Read Entire Article