
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), போஸ்னியாவின் டாமிர் டிசும்ஹூர் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட அல்காரஸ் 6-1, 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் டாமிர் டிசும்ஹூரை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.