
மும்பை,
மராட்டிய மாநிலம் தாராசிவ் மாவட்டம் படண்டா பகுதியில் ஆர் ஜி ஷிண்டே கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வர்ஷா கரத் (வயது 20) என்ற மாணவி கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், கல்லூரியில் நேற்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவி வர்ஷா கரத் மகிழ்ச்சியுடன் உரையாற்றிக்கொண்டிருந்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென வர்ஷா மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவிகள் வர்ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வர்ஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நிகழ்ச்சியின்போது வர்ஷாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வர்ஷாவுக்கு 8 வயதில் இதய அறுவை செய்யப்பட்டுள்ளது. அதன்பின், எந்தவித உடல் ரீதியான பாதிப்புமின்றி வர்ஷா வாழ்ந்து வந்தார்.
தற்போது பிரிவு உபசார உரையின்போது வர்ஷாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வர்ஷா மகிழ்ச்சியுடன் உரையாற்றிக்கொண்டிருந்ததும், அப்போது அவர் தீடிரென மயங்கி விழுவதும் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.