பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ஜீப்ரா' படத்தின் வசூல் விவரம்

2 days ago 1

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ஜீப்ரா' படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கில் இருந்து சத்யதேவ் மற்றும் கன்னடத்தில் இருந்து தனஞ்சயா ஆகியோரின் முக்கிய நட்சத்திரங்களின் மூன்று வெவ்வேறு கதைகளை பிணைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஒவ்வொருவரும் அந்தந்த கதைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பிரபல வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் சத்யதேவ். அவரின் நீண்ட நாள் காதலியான பிரியா பவானி சங்கர் இதே பேங்கிங் பணியை வேறு ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு கஸ்டமருக்கு நான்கு லட்ச ரூபாயை அனுப்புவதற்கு பதில் வேறு ஒருவருக்கு தவறுதலாக நம்பர் மாற்றி செலுத்தியதால் அந்த பணம் அவருக்கு சென்று விடுகிறது. இதனால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நாயகியை மற்றொரு வங்கியில் வேலை செய்யும் நாயகன் சத்யதேவ் தனது மூளையை பயன்படுத்தி சில பல தகிடு திட்டங்கள் போட்டு பணத்தை மீட்டு கொடுத்து விடுகிறார். இந்த சிக்கலில் இருந்து தப்பித்த நாயகன் சத்யதேவ், தான் போட்ட தகடு திட்டத்தால் வேறு ஒரு பெரிய பண பிரச்சனை சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். வில்லன் தாலி தனஞ்செயாவின் மிகப்பெரிய கோடிக்கணக்கான பணம் ஒன்று மாறி மாறி வேறு வேறு அக்கவுண்டுகளுக்கு நாயகன் பெயரில் பணப்பரிமாற்றம் நடந்து விடுகிறது. அந்த பணத்தை நான்கு நாட்களில் மீட்டுக் கொடுக்க வேண்டும் என வில்லன் ஹீரோவுக்கு கெடு வைக்கிறார். மாத சம்பளம் வாங்கும் நாயகன் அவ்ளோ பெரிய தொகையை வில்லனுக்கு திருப்பி கொடுத்தாரா? இல்லையா? வில்லனுக்கும் நாயகனுக்குமான இந்த பண ரேஸில் யார் ஜெயித்தார்கள்? இதுவே இப்படத்தின் மீதி கதை.

மகளிர் மட்டும், வி ஒன் மர்டர் கேஸ் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து பின் குயின் படம் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்த ஈஸ்வர் கார்த்திக் இப்படத்தை கொடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் மிக முக்கியமான திருப்புமுனையாகவும் மாறி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். சத்யராஜ் பாபா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அம்ருதா ஐயங்கார் மற்றும் பிற முக்கிய நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

'ஜீப்ரா' படம் முதல் 8 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article