பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை: 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்

2 months ago 13

வயநாடு,

வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த மாதம் 23-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து கடந்த மாதம் 28, 29-ந் தேதி என 2 நாட்கள் பிரியங்கா தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரியங்கா காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வயநாடு வருகிறார். அவருடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வருகிறார். இன்று முதல் வருகிற 7-ந் தேதி வரை 5 நாட்கள் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா கலந்துகொண்டு பேசுகிறார்.

Read Entire Article