தேவகோட்டை: 'அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும்' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை தான் மக்கள் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள்.