பிரிந்த மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது

3 weeks ago 6

பெரம்பூர்: ஓட்டேரி மங்களபுரத்தை சேர்ந்தவர் ரேபிகா (27). இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு அயனாவரம் ஏகாங்கிபுரம் 5வது தெருவை சேர்ந்த சதீஷ் (35) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்டெபி (6) என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ரேபிகா, கடந்த 5 மாதங்களாக கணவர் சதீஷை பிரிந்து, தனியாக வாழ்ந்து வருகிறார். சதீஷிடம் மகள் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், சதீஷ் தனது நண்பர்களுடன் இரவு 10 மணிக்கு ரேபிகா வீட்டிற்கு சென்று, தன்னுடன் சேர்ந்து வாழும்படி கூறியுள்ளார்.  அவர் வர மறுத்ததால், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரேபிகா, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சதீஷை பிடித்து, அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

The post பிரிந்த மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article