தேவையான பொருட்கள்:
ட்ரை ஃப்ரூட் மிக்சருக்கு
உலர் திராட்சை – 1 1/2 கப்
பேரிச்சம் பழம் – 5 (பொடியாக நறுக்கியது)
உலர்ந்த கொடி முந்திரி – 6 (பொடியாக நறுக்கியது)
டூட்டி ப்ரூட்டி – 1/4 கப்
ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
கேரமலுக்கு
சர்க்கரை – 1/4 கப்
தண்ணீர் – 1/4 கப்
ட்ரை மிக்சருக்கு..
மைதா – 1 1/2 கப்
பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
பட்டை தூள் – 1 டீஸ்பூன்
கிராம்பு தூள் – 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
சுக்கு தூள் – 1 டீஸ்பூன்
ப்ளம் கேக் மாவிற்கு..
உப்புள்ள வெண்ணெய் – 100 கிராம்
சர்க்கரை – 1/2 கப்
வென்னிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்
துருவிய ஆரஞ்சு தோல் – 1 டேபிள் ஸ்பூன்
முட்டை – 2
முந்திரி – 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் ஒரு 8 இன்ச் பேக்கிங் பேனை எடுத்து, பாரச்மெண்ட் பேப்பரை அதனுள் வைத்து, அதன் மேல் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் உலர் திராட்சை, உலர் கொடி முந்திரி, டூட்டி ப்ரூட்டி, பேரிச்சம் பழம் போன்றவற்றை எடுத்து, அத்துடன் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி, அடுப்பில் வைத்து, உலர் பழங்கள் மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.உலர் பழங்கள் நன்கு மென்மையானதும், அடுப்பை அணைத்துவிட்டு, அவற்றை குளிர வைக்க வேண்டும்.அடுத்து கேரமல்லை தயாரிக்க வேண்டும். கேரமல் கேக்கிற்கு நல்ல ப்ளேவரையும், நிறத்தையும் தரும். அதற்கு ஒரு பேனில் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். அப்படி சூடேற்றும் போது, சர்க்கரையின் நிறமானது அடர் நிறத்தில் மாறத் தொடங்கும் சமயத்தில் 1/4 கப் நீரை ஊற்றி தொடர்ந்து கிளறி விட வேண்டும். கேரமல் நீர் போன்ற பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு குளிர வைக்க வேண்டும்.பின்பு ஒரு பௌலில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பட்டைத் தூள், சுக்குத் தூள், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து மற்றொரு பௌலில் வெண்ணெய், சர்க்கரை, வென்னிலா எசன்ஸ், ஆரஞ்சு தோல் ஆகியவற்றை சேர்த்து நன்கு க்ரீமியாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு ஒருசேர பீட்டர் கொண்டு கலந்து கொள்ள வேண்டும்.பின் அதில் மைதா மாவு கலவை, உலர் பழங்களின் கலவை மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு ஒருசேர கெட்டியான மாவாக கலந்து காள்ள வேண்டும்.பின்னர் கேக் பேனில் தயாரித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ப்ரீ ஹீட் செய்யப்பட்டுள்ள ஓவனில் வைத்து 45 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை பேக்கிங் செய்து எடுக்க வேண்டும். பேனில் இருந்து கேக்கை எடுப்பதற்கு முன் கேக் தயாராகி விட்டதா என்று, ஒரு டூத் பிக் கொண்டு குத்தி பார்க்க வேண்டும். டூத் பிக்கில் மாவு எதுவும் ஒட்டாமல் இருந்தால், கேக் தயார் என்று அர்த்தம்.ஓவனில் இருந்து கேக்கை வெளியே எடுத்ததும் உடனே கவிழ்த்துவிடாமல், அறைவெப்பநிலைக்கு வரும் வரை குளிர வைத்து, பின் அதை கவிழ்த்தால், சுவையான பிரிட்டிஷ் ப்ளம் கேக் தயார்.
The post பிரிட்டிஷ் ப்ளம் கேக் appeared first on Dinakaran.