
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று தலைமை செயலகத்தில் பிரான்சின் விளையாட்டுத்துறை தூதர் சாமுவேல் டுக்ரோக்கெட் உடன் ஒரு நல்ல சந்திப்பு நடந்தது.
பார்முலா 4 சென்னை, ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை ஸ்குவாஷ் போன்ற தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகளை அவர் அன்புடன் நினைவு கூர்ந்து பாராட்டினார். அதிக பண ஊக்கத்தொகை, வீரர்கள் ஆதரவுத் திட்டங்கள், முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுகள் போன்ற பல முயற்சிகளுக்கு பாராட்டுகளைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக பிரான்ஸ் மற்றும் தமிழ்நாடு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த யோசனைகளைப் பரிமாறிக் கொண்டோம்.என தெரிவித்துள்ளார் .