பிரமாண்ட இயக்குநர்களுக்கெல்லாம் கேங்ஸ்டர் ஷங்கர்தான் - ராஜமவுலி

6 months ago 19

ஐதராபாத்,

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.இப்படத்தின் "ஜரகண்டி" ,'ரா மச்சா மச்சா' மற்றும் 'லைரானா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் 'லைரானா' பாடல் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி கலந்து கொண்டார். 

இந்த விழாவில் பேசிய இயக்குநர் ராஜமவுலி , "இந்த தலைமுறை இயக்குநர்கள் எங்களை பார்த்து பெருமைப்படுகின்றனர். ஆனால் நாங்கள் இயக்குநர் ஷங்கரை பார்த்து பெருமைப்படுகிறோம், அவர்தான் பிரமாண்ட பொழுதுபோக்கு படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு கேங்ஸ்டர். எங்களைப் போன்ற பலருக்கும் ஷங்கர்தான் உத்வேகமாக இருந்தார் " என பாராட்டியுள்ளார்.

"#Shankar is the OG of directors. He gave confidence to filmmakers to dream big"- #SSRajamouli at #GameChanger trailer launch pic.twitter.com/x5hQyV0g9i

— AmuthaBharathi (@CinemaWithAB) January 2, 2025

பிரமாண்ட பொருட்செலவில் படங்களை இயக்கி தமிழ் சினிமாவை உலக அளவில் நிலை நிறுத்தியவர் இயக்குநர் ஷங்கர். அவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'சிவாஜி' திரைப்படம் தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article