பிரபாஸ் படத்தில் 'நிமிர்' பட நடிகை?

8 months ago 50

சென்னை,

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது நடிகர் பிரபாஸ் 'தி ராஜ் சாப்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சீதாராமம்' பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

இதில், பிரபாசுக்கு ஜோடியாக அறிமுக நடிகை இமான்வி நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை நமீதா பிரமோத் இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நமீதா பிரமோத் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு உதயநிதி, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'நிமிர்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article