பிரபாஸின் 'தி ராஜா சாப்' - முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்

4 hours ago 1

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் பிரபாஸ், மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார்.

பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் மற்ற அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இயக்குனர் மாருதி இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, 'அதிக எச்சரிக்கை... மே மாத மத்தியில் இருந்து வெப்ப அலைகள் இன்னும் உயரும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் அடுத்த மாதத்தில் 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HIGH ALERT…‼️HEAT WAVES gonna rise even higher from mid May! pic.twitter.com/EdEdtMCq6E

— Director Maruthi (@DirectorMaruthi) April 23, 2025
Read Entire Article