தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, சீமான் போர் முனையில் சந்தி்த்து பேசியதாகவும், அதன் பிறகு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் சீமான் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.