பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்

3 months ago 23

திருவனந்தபுரம்: பிரபல மலையாள சினிமா டைரக்டரும், நடிகருமான பாலச்சந்திர மேனன் தன்னை பலாத்காரம் செய்தார் என்றும், குரூப் செக்சில் ஈடுபட கட்டாயப்படுத்தினார் என்றும் கூறி ஒரு நடிகை போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் பாலச்சந்திர மேனன். இவர் நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என அனைத்தையும் கையாளுவதில் மிகவும் திறமையானவர். அதிக படங்களில் திரைக்கதை, வசனம் எழுதி நடித்ததற்காக இவரது பெயர் லிம்கா உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. பிரபல நடிகைகளான ஷோபனா, கார்த்திகா, ஆனி உள்பட பலரை இவர் தான் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில் டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது எர்ணாகுளம் ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகை பலாத்கார புகார் கூறியுள்ளார். ஏற்கனவே இவர்தான் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீது பலாத்கார புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு விசாரணைக் குழுவிடம் அவர் நேற்று அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது: கடந்த 2007ம் ஆண்டு ஜனவரியில் பாலச்சந்திர மேனன் இயக்கி நடித்த தே இங்கோட்டு நோக்கியே என்ற படத்தின் படப்பிடிப்பின் போது ஓட்டல் அறைக்கு வரவழைத்து அவர் என்னை பலாத்காரம் செய்தார்.

அறைக்கு சென்ற போது அவர் 3 இளம் பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது குரூப் செக்சுக்கு என்னை அவர் கட்டாயப்படுத்தினார். வெளியே சொன்னால் படத்தில் நடித்துள்ள காட்சிகளை நீக்கி விடுவேன் என்று மிரட்டினார். அது தான் எனக்கு முதல் படம் என்பதாலும், எனக்கு வாய்ப்பு தந்தவர் என்பதாலும் நான் பயந்து இதுவரை யாரிடமும் சொல்ல வில்லை. இவ்வாறு அந்த நடிகை தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ஜாபர் இடுக்கி மீதும் அந்த நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஓட்டல் அறையில் வைத்து நடிகர் ஜாபர் இடுக்கி தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக இந்த நடிகை சிறப்பு விசாரணைக் குழுவுக்கு இமெயில் மூலம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 2012ல் லண்டனில் ஒரு கலைநிகழ்ச்சிக்காக சென்ற போது அந்த நிகழ்ச்சியின் ஒரு ஸ்பான்சருடனும், நடிகர் கலாபவன் மணியுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் ஜாபர் இடுக்கி தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் அந்தப் புகாரில் இவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கியுள்ள மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

The post பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார் appeared first on Dinakaran.

Read Entire Article