பிரபல நடிகை வீட்டில் நகை திருட்டு: போலீசார் விசாரணை

7 months ago 25

சென்னை,

கடந்த 1985-ம் ஆண்டு வெளியான 'ஆண்பாவம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சீதா. அதனைத்தொடர்ந்து, விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான இவர், நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சீதா, விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த மாதம் 31-ம் தேதி, உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த இவர், தான் அணிந்திருந்த 4 1/2 பவுன் நகைகளை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு உறங்கி இருக்கிறார். பின்னர், எழுந்து பார்த்தபோது அந்த நகைகள் அனைத்தும் காணாமல் போயுள்ளது. இதனையடுத்து அந்த நகைகளை கண்டுபிடித்து தரவேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article